search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி ஜின் பிங்"

    பாகிஸ்தானின் நலன் மற்றும் இறையாண்மையை சீனா உறுதியாக ஆதரிக்கும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவித்துள்ளார். #SCOSummit
    பீஜிங் :

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

    இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் தேச நலன், ஒருமைப்பாடு மற்றும் அந்நாட்டின் இறையாண்மையை சீனா உறுதியாக ஆதரிக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் அதிபரிடம் கூறியதாக, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    மேலும், இருநாடுகளுடனான உறவை பாதுகாப்பது, நட்புரீதியில் தகவல்தொடர்புகளை அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்வது, பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் ஆற்றல் மற்றும் போக்குவரத்தில் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பு வழங்க சீனா விரும்புவதாக அந்த சந்திப்பின் போது  ஜி ஜின் பிங் பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவித்ததாக கெங் சுவாங் கூறியுள்ளார். #MamnoonHussain #XiJinping #ShanghaiCooperationOrganisation

    ×